தீ விபத்தில் சிக்கி 18,000க்கும் மேற்பட்ட பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு.!

Date:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18,000க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த மாட்டு பண்ணை டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய பால் உற்பத்தி பண்ணையாக கருதப்படுகிறது.

மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில் இந்த விபத்தில் மனித உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் பல கிலோமீட்டர் தொலைவில் வானத்தில் கரும் புகை கிளம்பியது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்த ஒருவர் காயமடைந்த நிலையில், காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில், சில அமெரிக்க செய்தி நிறுவனங்கள் இந்த விபத்து இதுவரை இல்லாதா மிகப்பெரிய விபத்து என்றும் இதனால் பேரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சுமார் 6.5 மில்லியன் பண்ணை விலங்குகள் இதுபோன்ற தீயில் உயிரிழந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை கோழிகள் என்று கூறப்படுகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று இரவு மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு...

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 10 விக்கெட்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில்...