இலங்கையின் தென்பகுதி காலி -அவுங்கல்ல மித்தரமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கி சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 29 வயதானவர் பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.