தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று 11 காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சீமெந்து ஏற்றிச் சென்ற டேங்கர் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், சாரதி மற்றும் உதவி சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.