நடிகையும், பா.ஜ., நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு காய்ச்சல், உடல் வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‛கடுமையான காய்ச்சல், உடல் வலி போன்றவற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். உங்கள் உடல் உங்களிடம் ஏதாவது சொன்னால் தயவுசெய்து அதை நிராகரிக்காதீர்கள். நான் விரைந்து குணமாகிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது’ எனத் தெரிவித்துள்ளளார்.