அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் என்ஜினில் இருந்து பயங்கர தீ பற்றியது. நடுவானில் விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியதால் என்ஜினில் தீ பற்றியுள்ளது.
என்ஜினில் தீ பற்றியதால் விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். தீ பற்றியது குறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஒஹியோ விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக தரையிறக்கினார்.
பின்னர் உடனடியாக என்ஜினில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் பினிக்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுவானில் விமான என்ஜினில் தீ பற்றி எரிந்த நிகழ்வை தரையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/aviationbrk/status/1650232686873571328