2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலைத் தவணை நாளை திங்கட்கிழமை 27 ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்றுள்ள தனியார் பாடசாலைகள், 2023 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையை நாளை தொடங்கவுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் 2022 ஆம் ஆண்டுக்கான இறுதித்தவணை முடிவடைந்திருந்தது.
இந்த நிலையில், நாளையுடன் ஆரம்பமாகும் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் பாடசாலை தவணை, எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதியுடன் முடிவடையும்.
அதற்கமைய, முதலாம் தவணை மற்றும் சித்திரை புத்தாண்டு விடுமுறை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை அமுலாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.