தமிழில் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் அறிமுகமானவர் நிதி அகர்வால். கலக தலைவன் படத்தில் உதயநிதியுடன் நடித்து இருந்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நிதி அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “நான் இதுவரை கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து இருக்கிறேன். முதல் முறையாக பவன் கல்யாண் ஜோடியாக ஹர ஹர வீரமல்லு தெலுங்கு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
எனது சினிமா வாழ்க்கையில் இந்த படம் மிகவும் பிரத்தியேகமான படமாக இருக்கும். நான் சினிமாவில் அழகாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதுடன், நடிப்பிலும் தினமும் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். நான் மட்டுமல்ல நடிப்பு விஷயங்களை முழுமையாக அறிந்தவர்கள் யாருமே இல்லை.
நடிப்பு தொடர்பான எல்லா விஷயங்களும் எல்லோருக்கும் தெரியாது. கதாபாத்திரங்களை புரிந்து கொண்டு நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன். திரைப்படங்களை பார்த்தும், ஓ.டி.டி. தங்களில் வரும் தொடர்களை பார்த்தும் நடிகையாக நான் என்னை மெருகேற்றிக்கொண்டு வருகிறேன்” என்றார்