தமிழகத்திலிருந்து புகலிடம் கோரி நியுசிலாந்திற்கு கடல் பயணம் மேற்கொண்டவர்கள் தொடர்பில் அரசாங்க பதிவேட்டில் எவ்வித பதிவுகளும் இல்லை என நியுசிலாந்து அறிவித்துள்ளது.
நியுசிலாந்தின் குடிவரவு அமைச்ச மைக்கல் வூட் (Michael Wood ) இதனை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சட்டவிரோதமாக வருகை தருவோரை நான்கு முதல் 28 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கும் சட்டம் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டது.
இதன்போது நியுசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புகலிடம் கோரியவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 90 அடி நீளமுள்ள மீன்பிடி இழுவை படகு ஒன்று, இந்தியாவின் முனம்பம் அருகே மாலியங்கராவில் இருந்து புறப்பட்டதாகவும், அதில் 248 தமிழ் புலம்பெயர்ந்தோர் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் பயணித்துள்ளனர்.
நியுசிலாந்து குடிவரவு பதிவேட்டில் அவர்கள் தொடர்பிலான விபரங்கள் உள்ளதாக என்று வினவப்பட்டுள்ளது.
குறித்த படகு மற்றும் படகில் பயணித்தவர்கள் தொடர்பிலான விபரங்கள் நியூசிலாந்து அரசாங்க பதிவேட்டில் இல்லை என குடிவரவு அமைச்சர் (ஆiஉhயநட றுழழன ) தெரிவித்துள்ளார்.
குறித்த புகலிட கோரிக்கையாளர்கள் நியூசிலாந்துக்கே சென்றதாக ; இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபு தண்டபாணி என்பவர் தெரிவித்துள்ள நிலையில் நியூசிலாந்து அமைச்சின் கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.