நியூசிலாந்தில் உள்ள சீன உணவகத்தில் கோடாரியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை தாக்கிள்ளார்.
இச்சம்பவம் நேற்று (19) இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மேலும் அந்த உணவகத்திற்கு கோடாரியுடன் வந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். ஒவ்வொரு உணவகமாக சென்று அந்த நபர் தாக்குதல் நடத்தினார்.
கோடாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் உணவக வாடிக்கையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் கோடாரி தாக்குதல் நடத்திய 24 வயது இளைஞரை கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கான காரண்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.