நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டும் பட அதிபர்

Date:

2001-ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான ‘ஹேமந்தர் பகி’ என்ற படம் மூலம் ஸ்வஸ்திகா முகர்ஜி நடிகையாக அறிமுகமானார்.

‘காலா’ என்ற படம் மூலம் இந்தி திரையுலகுக்கு வந்தார். இந்தியில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். பிரபல இந்தி நடிகையான ஸ்வஸ்திகா முகர்ஜிக்கு தற்போது 42 வயது ஆகிறது.

அவர் பெங்காலி மற்றும் இந்தி மொழி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். பெங்காலி சினிமா ரசிகர்கள் மத்தியில் ஸ்வஸ்திகா முகர்ஜி மிகவும் பிரபலம்.

தற்போது ‘ஷிபுர்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஸ்வஸ்திகா முகர்ஜி கொல்கத்தாவில் உள்ள கோல்ப் கிரீன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்தி நடிகைகள் அனைவரும் எந்த பிரச்சினையும் செய்யாமல் என் ஆசைக்கு உடன்படுகிறார்கள்.

இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு கொடுத்து நிறைய சம்பளம் வாங்கி கொடுத்தது நான்தான். எனவே என்னுடன் ஒரு நாள் மட்டும் படுக்கையை பகிர்ந்து கொள் என்று சந்தீப் சர்கார் தொல்லை கொடுக்கிறார்.

ஆசைக்கு உடன்படவில்லை என்றால் மார்பிங் செய்த உனது நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார் என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...