நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாபெரும் நடன போட்டி

Date:

பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருநை நடனப் போட்டி (பரதநாட்டியம் &கிராமிய நடன போட்டிகள் )நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.

போட்டிகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி துவங்கி வைத்தார். பரதம், மற்றும் கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை)போன்ற நடனங்களை முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஐந்து வயது முதல் இருபது வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியின் நடுவர்களாக கலா ரத்தினம் சிவகாமி, கலை வளர்மணி கல்யாணி ,சுப துர்கா நெல்லையப்பன், கலை ஆசிரியை சொர்ணம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பேராசிரியை பிரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் தமிழ் புத்தாண்டு அன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...