பெரும்போக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 3 மில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஏற்கனவே 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த மேலதிக 3 மில்லியனுடன், பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 13 மில்லியன் ரூபாவாகும்.