பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள கோட் அசாம் பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 6 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர். பின்னர் அங்கிருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.