பால் மா விலை குறைப்பு குறித்த தீர்மானம்

Date:

பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும், குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை (15) விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நேற்று (12) அறிவித்தார்.

இதேவேளை, இன்று (13) முதல் சீனி இறக்குமதியாளர்களின் கடைகளை சோதனையிடுவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் சீனியின் விலையை அதிகரிக்க வேண்டாம் என இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...