இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், 10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது.
ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருதை 10 முறை வென்ற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகளவில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்களில் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்ற இந்திய வீரர்கள்
10 – அஸ்வின்
5 – சச்சின்
5 – சேவாக்
4 – கபில் தேவ்
4 – ஹர்பஜன் சிங்
4 – அனில் கும்ப்ளே
4 – ராகுல் டிராவிட்
தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்ற வீரர்கள்
1. முரளிதரன் – 11
2. அஸ்வின் – 10
3. காலிஸ் – 9
4. இம்ரான் கான்/ஹேட்லிஃவார்னே – 8
5. வாசிம் அக்ரம்/சந்தர்பால் – 7