பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் – ஜெகதீசன் களத்தில் இறங்கினர். ஜெகதீசன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் போன்று நிதானமாக விளையாட, ஜேசன் ராய் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து தூள் பறத்தினார்.

29 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெகதீசன் 29 பந்தில் 27 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 31 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக ரன்களை சேர்த்த கேப்டன் நிதிஷ் ராணா 21 பந்தில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்தார்.

ரஸல் 1 ரன்னும், ரின்கு சிங் 18 ரன்னும், டேவிட் வைஸ் 12 ரன்னும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 200 ரன்களை குவித்தது.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பெங்களூரு அணி தரப்பில் ஹசரங்கா, விஜயகுமார் வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் இல்லாமல் விளையாடியது எனது அதிர்ஷ்டம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 371 ரன்னில் ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

அமீரகத்தின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை… பின்னணியில் தந்தையின் பாச போராட்டம்..!

இன்றைய காலக்கட்டத்தில் உறவுக்குள் இருக்கும் பாசம் குறைந்து பணத்திற்கு மதிப்பு தருவதாக...

யூரோ கோப்பை: பிரான்ஸ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி...