பெண்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட தடை விதித்த தலிபான்கள்

Date:

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் திகதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

பெண்களின் கல்வி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களின் சுதந்திரம் பல்வேறு வழிகளில் தலிபான்களால் பறிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உலகம் முழுவதும் இஸ்லாமிய மத பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மதத்தினர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ரம்ஜான் கொண்டாட தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகையை வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டாடக்கூடாது.

அந்நாட்டின் பஹ்லன் மற்றும் தக்ஹர் மாகாணங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையான இன்று பெண்கள் வீட்டை விட்டு வெளியே குழுவாக செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்கக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

முன்னதாக, பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொது இடங்கள், பூங்காக்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் ஏற்கனவே தடை விதித்திருந்தனர். அதேபோல், கருத்தடை மாத்திரைகளை பெண்கள் பயன்படுத்தவும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...

வேலை காட்டிய எலான் மஸ்க் – எக்ஸ் தளத்தில் புது அப்டேட்.. வாயடைத்து போன இளசுகள்

உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட...

வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க அணியில் முன்னாள் இந்திய வீரர்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும்...

ஹர்திக் பாண்ட்யாவின் செயல்.. சுப்மன் கில் அவமதிக்கப்பட்டாரா? வைரல் வீடியோ

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன்...