பொது மக்களுக்கான எச்சரிக்கை

Date:

மேல், தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் நாளைய தினம் அதிக வெப்பநிலையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக தாகம் மற்றும் தசைப்பிடிப்பு போன்றன ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வயோதிபர்கள் மற்றும் நோய்க்குட்பட்டவர்களை வீட்டிற்குள்ளேயே தங்கவைக்குமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை கால்நடைகளை நிழலில் கட்டிவைக்குமாறும் கால்நடைகளுக்கு அதிகமாக தண்ணீரை வழங்குமாறும் மில்கோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...