அலவத்துகொட பகுதியில் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 43 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகைப்பட நிலையத்தின் கனிணி உதவியுடன் இந்த நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில், 36 மற்றும் 41 வயதுடையவர்களே கைதாகியுள்ளனர்.
அவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.