மக்கள் படும் துன்பத்தை நேரில் வந்து பாருங்கள்!

Date:

நாட்டின் நிலைமை நன்றாக உள்ளதாக தலைநகர் குருந்துவத்தை குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு கூறும் நபர்களுக்கு, நாட்டின் உண்மை நிலையை அறிய குளிரூட்டி அறையை விட்டு வெளியேறி கிராமம் தோறும் மூளை முடுக்குகளுக்குச் சென்று பார்க்குமாறும், நாட்டிலுள்ள சில பாடசாலைகளைப் பார்த்தால் இடிந்து விழும் கட்டிடங்களைத் தான் காணக்கிடைத்தாலும், இவ்வாறான கஷ்டப் பாடசாலைகளுக்கு சில கிலோமீற்றர் தூரத்தில் சர்வதேச விமான நிலையங்கள் கூட நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான பணத்தில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி நாட்டின் கல்வியை அபிவிருத்தி செய்திருந்தால் எமது நாடு இன்று உலகில் குறிப்படத்தக்க இடத்தில் இருக்கும் நாடாக முன்னேறியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் 27 ஆவது கட்டமாக ஹம்பாந்தோட்டை உடமத்தல கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று 07 இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் பிரிவின் 27 ஆவது கட்டமாக 924,000 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹம்பாந்தோட்டை உடமத்தல கனிஷ்ட வித்தியாலயத்திற்கு கையளிக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு முன்னர் இருபத்தி ஆறு கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் ஊடாக 21,577,650 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

மேலும் பிரபஞ்சம் வேலைத் திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட்...

20 ஓவர் உலக கோப்பை: சூப்பர்-8 முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா-அமெரிக்கா மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்...

சென்னை-நாகர்கோவில் புதிய வந்தே பாரத் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க முடிவு

சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து சென்னைக்கு...

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...