மண்சரிவு அனர்த்தம் காரணமாக, பண்டாரவளை பூனாகலை கபரகலை மற்றும் மக்கள்தெனிய பகுதியில் 142 குடும்பங்கள் நிர்க்கதியாகி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அந்தக் குடும்பங்களுக்கு, காணியை ஒதுக்கி, மிக விரைவாக வீடுகளை அமைத்துக் கொடுக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.