மன்னாரில் இளம் குடும்பஸ்தர் படுகொலை

Date:

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறிய நிலையில், ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றைய குழுவின் நபர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதன் போது படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர், நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசித்து வந்த 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடா்பில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட்...

20 ஓவர் உலக கோப்பை: சூப்பர்-8 முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா-அமெரிக்கா மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்...

சென்னை-நாகர்கோவில் புதிய வந்தே பாரத் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க முடிவு

சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து சென்னைக்கு...

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...