இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் படப்பிடிப்பு தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த விபத்து ஏ.ஆர்.அமீனின் பாடல் ஒன்றுக்கான படப்பிடிப்பு இடம்பெற்ற தளத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இதன்போது, படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தளமும், அலங்கார விளக்குகளும் அறுந்து விழுந்துள்ளன.
எனினும், தான் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் உயிர்தப்பியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.அமீன் பகிர்ந்துள்ளார்.
குறித்த அந்த பதிவில்,
இன்று நான் பாதுகாப்பாக உயிருடன் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் ஆன்மீக ஆசிரியருக்கும் நன்றி.
மூன்று இரவுகளுக்கு முன் நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன். கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன்.
நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செட் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. சில அங்குலங்கள்.
சில வினாடிகளில் மேடை செட் எங்கள் தலையிலேயே விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.