ஹப்புத்தளைக்கும் – ஹிதல்கஸ்கின்னவுக்கும் இடையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மலையக தொடரூந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து பதுளைக்கு பயணித்த தொடரூந்து குட்சைட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அஞ்சல் தொடரூந்து சேவையும் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.