ஹொரணை பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடம் இருந்து நூறு மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபரை ஹொரணை தெல்கஹ கொடல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் ஹொரணை நகரிலுள்ள பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை இலக்கு வைத்து 250, 300 மற்றும் 500 ரூபா போன்ற விலைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
50 வயதுடைய சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.