மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் ஜோபைடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோபைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியின் கமலா ஹாரிசும் உள்ளனர்.
இந்நிலையில் 2024-ல் நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் ஜோபைடன் , கமலா ஹாரிஸ் போட்டியிடுவர்களா ?என்ற கேள்வி எழுந்துள்ளது.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். எனவே டொனால்டு டிரம்ப்பை வீழ்த்த ஜோபைடனை மீண்டும் அதிபர் வேட்பாளராக நிறுத்தவற்கான முயற்சியில் ஜனநாயக கட்சி ஆலோசித்து வருகிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.