சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் மே 23-ஆம் திகதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்,அதற்கு ஏற்ற வகையில் பயணத் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகளை செய்துள்ள நிலையில், மேலும் முதலீடுகளை ஈர்க்கின்ற வகையிலும், நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக சிங்கப்பூர் நாட்டிற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதேபோன்று உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் விதமாக துறைவாரியாக அமைச்சர்கள் வெளிநாடு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.