முதல் நாளிலேயே 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை- “லியோ” அலப்பறை துவக்கம்

Date:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம், வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த “வாரிசு”, திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் “லியோ” திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, ” லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...