மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

Date:

காங்கயம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

காங்கயம் நகரம், மூர்த்திரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி பாலாமணி (வயது 44). இந்தநிலையில் பாலாமணி தனது தாயார் வீடான காங்கயம் அருகே உள்ள காடையூர், கல்லாங்காட்டுபுதூர் பகுதிக்கு நேற்று முன்தினம் மதியம் காடையூர் – கல்லாங்காட்டு புதூர் செல்லும் சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாலாமணியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 ஆசாமிகள் வந்தனர். கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்தபோது அந்த 2 ஆசாமிகளும் திடீரென பாலாமணி ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.

பாலாமணியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார்கள். இதனால் பதற்றம் அடைந்த பாலாமணி சத்தம் போட்டார்.

உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அந்த மர்ம ஆசாமிகளை துரத்திச்சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார்.

அதன் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கயம் அருகே பட்டப்பகலில் சாலையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 2 மர்ம ஆசாமிகள் 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காங்கயம் பகுதியில் இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...

வேலை காட்டிய எலான் மஸ்க் – எக்ஸ் தளத்தில் புது அப்டேட்.. வாயடைத்து போன இளசுகள்

உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட...

வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க அணியில் முன்னாள் இந்திய வீரர்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும்...

ஹர்திக் பாண்ட்யாவின் செயல்.. சுப்மன் கில் அவமதிக்கப்பட்டாரா? வைரல் வீடியோ

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன்...