யால தேசிய சரணாலயத்தில் இருந்த மிகப்பெரிய தந்தம் கொண்ட யானையான ‘தல கொட்டா’ உயிரிழந்தது.
40 வயதுடைய குறித்த யானை நீண்ட நாட்களாக நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை அளித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு அருகில் உயிரிழந்த நிலையில், யானையின் சடலம் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
யால தேசிய சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த மிருகமாக இந்த யானை காணப்பட்டுள்ளது.