யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னாள் உள்ள பாரிய மரம் சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெய்த கன மழை காரணமாக குறித்த மரம் வேராடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் மூன்று மின்கம்பங்கள் முறிந்துள்ளதோடு தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னாள் உள்ள கடை ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.