ரஜினிகாந்த்- விஜயகாந்தை இயக்கிய பிரபல டைரக்டரும் நடிகருமான மனோபாலா காலமானார்

Date:

சினிமா டைரக்டர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா (69). தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார்.

மனோபாலா 24 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

அவர் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே சிகிச்சை முடித்த அவரை டாக்டர்கள் ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளனர்.  இன்றைய தினம் அவர் காலமாகிவிட்டார்.

நடிகர் மனோபாலாவின் உடல் சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.. அங்கே மனோபாலா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விரைவில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே அவரது இறுதிச் சடங்கு குறித்த தகவல்களை வெளியாகியுள்ளது. அதன்படி வளரசவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நாளை காலை 10 மணிக்கு மனோபாலா உடல் தகனம் செய்யப்படுகிறது என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மூத்த டைரக்டர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.1979-ல் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக சேர்ந்து சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

அதே படத்தில் சில காட்சியில் நடிக்கவும் செய்தார். டிக் டிக் டிக், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களிலும் சிறுசிறுவேடங்களில் தோன்றி பின்னர் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகராக உயர்ந்தார். 1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் டைரக்டராக அறிமுகம் ஆனார்.

ரஜினிகாந்த், விஜயகாந்தை வைத்து இவர் படங்கள் இயக்கி உள்ளார். ரஜினிகாந்தை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கி உள்ளார். 1987 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை திரைப்படம் வெளிவந்தது.

இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா, செந்தில் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தார்கள். மனோபாலா இயக்கத்தில் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் 1989 ஆம் ஆண்டு வெளிவந்தது.விஜயகாந்த், சுஹாசினி, ரேகா ஆகியோர் நடித்தார்கள்.

1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் மல்லுவேட்டி மைனர் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சீதா, ஷோபனா, செந்தில் மற்றும் வினு சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மனோபாலா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு பிள்ளை நிலா என்ற திரைப்படம் வெளிவந்தது.

முற்றுகை 1993 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் முற்றுகை திரைப்படம் வெளிவந்தது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புள்ளவில் இன்று...

சர்வதேச தரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் கடைசி உலகப் போர் – கிளிம்ப்ஸ் வீடியோ

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான...

ஜப்பானில் அனுர..

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க...