ரஷியாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்க வேண்டும்

Date:

உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில், ரஷியா படையெடுத்தது. இந்த போரானது, ஓராண்டுக்கும் மேலான நிலையில், முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

ரஷியாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பிற முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

உக்ரைனின் பாக்முத் நகரை கைப்பற்றி, ரஷிய கொடியும் சமீபத்தில் நாட்டப்பட்டது. இதனால், போரில் ரஷிய தரப்பில் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசும்போது, சர்வதேச நாணய நிதியகம் மற்றும் உலக வங்கிகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அதில், உலகம் முழுவதும் உள்ள ரஷியாவின் மத்திய வங்கியின் சொத்துகள், நிதிகளை முடக்க வேண்டும் என்றும் அவற்றை கொண்டு உக்ரைனை மறுகட்டமைப்பு செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

உக்ரைனில் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக இந்த நடவடிக்கையை ரஷியாவுக்கு எதிராக எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டு உள்ளார். ரஷியா தனது அராஜகத்திற்கான முழு விலையையும் உணர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் வீடியோவில் பேசும்போது, ரஷிய படையெடுப்பின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள், ரஷியாவின் வெளிநாட்டில் உள்ள 6 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளை முடக்கும் என அறிவித்தது.

ரஷிய நிறுவனங்களுக்கு எதிரான தடை நடவடிக்கைகளும் தொடர்ந்தன. ரஷிய அதிபர் புடின்டன் தொடர்புடைய பணக்காரர்களுக்கு எதிராகவும் தடை விதிக்கப்பட்டன.


இதேபோன்று ரஷியாவின் மத்திய வங்கியும் முடக்கப்படுவது பற்றி தெளிவாக குறிப்பிட வேண்டும். உலக அளவில் அது அமைதி உருவாக்கும் ஒரு நடவடிக்கையாக அமையும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...