ரஷியாவின் 80 சதவிகித கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்த இந்தியா, சீனா

Date:

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. இதனை தொடர்ந்து ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலையும் மேற்கத்திய நாடுகள் நிறுத்தின.

இதனை தொடர்ந்து ரஷியா கச்சா எண்ணெய் விற்பனையை ஆசியா பக்கம் திருப்பியது. ரஷியாவிடமிருந்து இந்தியா மற்றும் சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதத்தில் ரஷியாவிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா – சீனா முன்னிலையில் உள்ளன.

இந்தியாவும், சீனாவும் இணைந்து கடந்த மாதம் ரஷியாவின் 80 சதவிகித கச்சா எண்ணெயை கொள்முதல் செய்துள்ளது. ரஷியா கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் விற்பனை செய்துவரும் நிலையில் தினமும் 5 லட்சம் பேரல் வாங்கி வந்த சீனா தற்போது 22 லட்சம் பேரல் கொள்முதல் செய்து வருகிறது.

அதேபோல், ரஷியாவிடம் குறைவாகவே கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துவந்த இந்தியா தற்போது தினமும் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...