ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நிதியை மீளப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு பணத்தை எடுத்துச் சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை மீளக் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தியபோதும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.