இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, பஃப் டு பிளெசிஸ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், 175 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக, பிரப்சிம்ரன் சிங் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இன்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக விராட் கோலி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.