ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்கள் காரணமாக ஆயிரத்து 43 பேர் உயிரிழந்தனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, வாகன மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹப்புகொட இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
992 வாகன விபத்துக்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் 23 ஆயிரத்து 704 வாகனங்கள் பதிவாகியிருந்ததுடன் 2 ஆயிரத்து 370 பேர் குறித்த விபத்துக்களில் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு வாகன விபத்துக்களில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் தற்போது வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வாகன மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.