விஜய் தேவரகொண்டா மோதல் “பணம் கொடுத்து அவதூறு பரப்புகிறார்”

Date:

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனசுயா பரத்வாஜ், சின்னத்திரையில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் அனசுயா, கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்துள்ள விமானம் படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்து இருக்கிறார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அனசுயா, தற்போது கோடை விடுமுறைக்காக கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு பிகினி உடையில் வலம் வரும் அனசுயா தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் வெள்ளை நிற பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அனசுயா, தனது கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

தற்போது பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜுக்கும் நடிகர் விஜய்தேவரகொண்டாவுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

விஜய்தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருந்தார். விஜய்தேவரகொண்டா சிலருக்கு பணம் கொடுத்து தனக்கு எதிராக வலைத்தளத்தில் அவதூறுகள் பரப்பி வருகிறார் என்று அனுசுயா குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அனுசுயா அளித்துள்ள பேட்டியில், ”அர்ஜுன் ரெட்டி படம் வெளியானபோது அதில் விஜய்தேவரகொண்டா பேசிய மோசமான வசனம் இருந்தது. அந்த வசனத்தை அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர். அதனை நான் கண்டித்தேன்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இதுபோன்ற வசனங்கள் காரணமாகிறது என்று பேசினேன். இதனால் வலைத்தளத்தில் ரசிகர்கள் என்னை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அவர்களை விஜய்தேவரகொண்டா கட்டுப்படுத்தவில்லை.

அவரது குழுவில் இருந்த ஒருவரும் என்னை அவதூறு செய்து கருத்து பதிவிட்டதாக அறிந்தேன். விஜய்தேவரகொண்டாவுக்கு தெரியாமல் செய்து இருக்கமாட்டார். அவர் தூண்டுதல் பேரில்தான் இது நடக்கிறது என்பது தெரிந்தது.

விஜய்தேவரகொண்டா பலருக்கு பணம் கொடுத்து எனக்கு எதிராக வலைத்தளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்” என்றார்.

 

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புள்ளவில் இன்று...

சர்வதேச தரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் கடைசி உலகப் போர் – கிளிம்ப்ஸ் வீடியோ

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான...

ஜப்பானில் அனுர..

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க...