ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியின் (லோ லெவல் வீதி) திருத்தப் பணிகளை 03 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உாிய பிாிவிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாா்.
ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியின் திருத்தப்பணிகளின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(16) இடம்பெற்ற போதே அவா் இந்த பணிப்புரையை விடுத்துள்ளாா்.
இந்த திட்டம் தாமதிப்பதற்கான காரணங்களை தனித்தனியாக ஆய்வு செய்து விரைவில் தீர்வு காண அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிாிவு தொிவித்துள்ளது.