வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு இன்று (30) விஜயம் செய்தனர்.
வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து (28) ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
விக்கிரங்கள் வைப்பு செய்யப்பட்டமை மற்றும் ஆலயத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் பார்வையிடுவதற்காக குறித்த வழக்கில் ஆலயம் சார்பிலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சார்பிலும் மன்றில் ஆஜராகி வாதப் பிரதி வாதங்களை முன்வைத்த சட்டத்தரணிகள் குழு விஜயம் செய்திருந்தனர்.
இதில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வவுனியாவின் சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருஅருள், சட்டத்தரணிகளான திலீப் காந்தன், கீர்த்தனன், இளஞ்செழியன், திபின்சன் உள்ளிட்ட சட்டரத்தரணி குழுவினர் சென்றிருந்தனர்.
இவர்களுடன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சீ.வீ.கே.சிவஞானம், ஜி.ரி.லிங்கநாதன், சுகிர்தன், கேசவன் சயந்தன், ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.