நடிகர் ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவும் இயக்குனராக உள்ளார். இவர் ரஜினியின் ‘கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். இந்நிலையில், இவர் தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடி தளத்திற்காக உருவாகும் இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப்தொடர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.