வேறொரு பெண்ணுடன் கணவன் பைக் பயணம் மனைவியிடம் மாட்டிவிட்ட போக்குவரத்து துறை

Date:

வேறொரு பெண்ணுடன் பைக்கில் சென்ற நபரை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை அவரது மனைவிக்கு போக்குவரத்து துறையே அனுப்பிவைத்துள்ளது. இதனால், கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு போலீசில் புகார் கொடுக்கப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியை சேர்ந்த 32 வயது நபருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அந்த நபர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 25-ம் திகதி அந்த நபர் திருவனந்தபுரம் சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அந்த நபருடன் வேறொரு பெண்ணும் பயணித்துள்ளார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க ஏதுவாக அச்சாலையில் போக்குவரத்து துறை சார்பில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

அதில், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் வந்த அந்த நபர் மற்றும் அவருக்கு பின்னாள் இருந்த பெண் சிக்கியுள்ளனர். ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் அவரும் அவருக்கு பின்ன்னாள் இருந்த பெண்ணும் பயணிப்பதை கண்காணிப்பு கேமரா துல்லியமாக புகைப்படம் எடுத்துள்ளது.

பின்னர், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் பயணித்த அந்த நபர் மற்றும் அவருக்கு பின்னாள் இருந்த பெண்ணின் புகைப்படங்கள் ஸ்கூட்டர் உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இங்கு தான் தொடங்கியது பிரச்சினை. அந்த ஸ்கூட்டரின் உரிமம் அந்த நபரின் மனைவி பெயரில் உள்ளது. அந்த நபரின் மனைவி செல்போன் எண்ணுக்கு போக்குவரத்து துறையில் போக்குவரத்து விதி மீறியுள்ளீர்கள் அதற்கான அபராதத்தை செலுத்தும்படி இருந்து புகைப்படத்துடன் மெசேஜ் அனுப்பியுள்ளது.

ஸ்கூட்டரில் பின்னால் ஒரு பெண் அமர்ந்திருந்த புகைப்படத்தை காண்பித்து இது யார்? என கணவரிடம் மனைவி கேட்டுள்ளார். ஆனால், அந்த கணவரோ அந்த பெண் தன் தோழி தான் என்றும் அவர் லிப்ட் கேட்டதால் அவரை ஸ்கூட்டரில் ஏற்றிகொண்டு சென்றதாகவும், அந்த பெண்ணுக்கும் தனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால், கணவனின் விளக்கத்தை ஏற்கமறுத்த மனைவி அவரை சந்தேகப்பட்டுள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியை அந்த கணவர் தாக்கியுள்ளார். மேலும் தனது 3 வயது குழந்தையையும் அவர் தாக்கியுள்ளார்.

இதையடுத்து, கணவன் தாக்கியதில் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக போலீஸ் நிலையம் சென்று கணவன் மீது புகார் அளித்தார். அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரின் கணவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹெல்மெட் அணியவில்லை என போக்குவரத்து துறை புகைப்படத்துடன் அனுப்பிய மெசேஜால் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு அது கைது வரை நீடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...