வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
முதற்தடவையாக அல்லது பதிவுகளை புதுப்பிக்க இந்த இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.slbfe.lk எனும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் Online Self Registration எனும் பகுதிக்குள் பிரவேசித்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய தரவுகள் தொடர்பான விபரங்களையும் இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 1989 என்ற துரித அழைப்பு இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.