ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ராக்கெட் – சோதனையின் போது வெடித்துச் சிதறியது

Date:

உலக பணக்காரரும், முன்னனி தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ‘ஸ்டார் லிங்க்’ செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை இந்த நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த ராக்கெட்டிற்கு ‘ஸ்டார்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்ப ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது முதல் கட்டம் முடிந்து இரண்டாவது கட்ட சோதனை தொடங்கிய போது ராக்கெட் வெடித்துச் சிதறியது.

இது குறித்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விஞ்ஞானிகள் கூறுகையில், எதிர்பார்த்த முறையில் சோதனை நடைபெறவில்லை எனவும், தவறுகள் சரிசெய்யப்பட்டு விரைவில் அடுத்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...