ஹாலிவுட் வாய்ப்புக்காக வெப்தொடரில் ஆபாச காட்சிகளில் நடிப்பா…?

Date:

தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகி உள்ள ‘ஜீ கர்தா’ என்ற வெப் சீரிஸில் தமன்னா மிகவும் கவர்ச்சியாகவும் படுக்கையறை காட்சிகளிலும் ஆபாசமாக நடித்து உள்ளார்.அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரையுலகில் முத்தமிடக் கூடாது என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்தவர்.தமன்னா எந்த சூழ்நிலையிலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று 2016ல் அறிவித்தார். ஆனால் தற்போது தாராளம் காட்டி நடித்து வருகிறார்.

அமேசான் பிரைம் வீடியோவில் ‘ஜீ கர்தா’ ஒளிபரப்பாகி உள்ளது. இதில் தமன்னாவின் அவதாரத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தமன்னாவை டிரோல் செய்து வருகின்றனர்.

முத்தம் கூட கொடுக்காத தாங்களா எப்படி இவ்வளவு துணிச்சலான காரியம் செய்ய முடிகிறது என்று கேட்கிறார்கள். படுக்கையறை காட்சியில் தமன்னாவின் முகபாவனைகள் ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் சிலர் வேடிக்கையான மீம்களை உருவாக்குகிறார்கள்.

வெப் தொடர்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் ஆபாச காட்சிகளில் நடிகைகள் எல்லை மீறுவதாக விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் தமன்னாவும் வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அதை பார்த்த பலரும் தமன்னாவை கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு விளக்கம் அளித்து தமன்னா கூறும்போது, ”கதைக்கு தேவை என்பதால் அப்படி நடித்தேன். அதில் ஆபாசம் தெரியாது.

அதுபோல் கதைக்கு தேவையாக இருந்ததால் முத்த காட்சியிலும் நடித்தேன். ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகளில் நடிக்கவில்லை”என கூறி உள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐதராபாத்தை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ்...

இறுதி போட்டியில் ஐதராபாத் தோல்வி: கண்ணீர் விட்டு அழுத காவ்யா மாறன்- வீடியோ வைரல்

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ்...

ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு மம்தா வாழ்த்து

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று...

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...