அபாரா வெற்றி பெற்ற இலங்கை அணி!

Date:

அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 1 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் அபாரா வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 140 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் தினேஸ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி தனது 1 வது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அயர்லாந்து அணி சார்பில் Lorcan Tucker 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது 2 வது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன் அடிப்படையில் இலங்கை அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் 1 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரா வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...