ஆர்சிபியை அடித்து தெறிக்கவிட்ட ஃபிலிப் சால்ட்..! டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி

Date:

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. டெல்லியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, கரன் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், அமான் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி – ஃபாஃப் டுப்ளெசிஸ் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். டுப்ளெசிஸ் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த விராட் கோலி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐபிஎல்லில் தனது 50வது அரைசதத்தை அடித்த கோலி, ஐபிஎல்லில் 50 அரைசதங்கள் என்ற மைல்கல்லை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி. டேவிட் வார்னர் தான் முதலில் 50 அரைசதங்கள் அடித்தவர். வார்னர் இதுவரை 59 அரைசதங்கள் அடித்துள்ளார்.

மேக்ஸ்வெல் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். கோலி ஆட்டமிழந்தபின் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து அபாரமாக பேட்டிங் ஆடிய மஹிபால் லோம்ரோர் ஐபிஎல்லில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். 29 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54 ரன்களை விளாசி கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் 22 ரன்களுக்கும், 3ம் வரிசையில் இறங்கிய மிட்செல் மார்ஷ் 26 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஃபிலிப் சால்ட் ஆர்சிபி பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ஃபிலிப் சால்ட், 45 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ரைலீ ரூசோ 22 பந்தில் 35 ரன்களை விளாச, 17வது ஓவரிலேயே இலக்கை அடித்து டெல்லி கேபிடள்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...