உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகின்றது.

இதனால் உலகளவில் பொருளாதாரத்திலும், விநியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆனாலும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உக்ரைனில் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கிலான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின.

11 பேர் கொல்லப்பட்டனர். ஏவுகணை மழை அதன்பிறகு நேற்று அதிகாலை நேரத்தில் உக்ரைனின் மின்சக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

வடக்கில் கார்கிவ் நகரம் தொடங்கி தெற்கே ஒடேசா, மேற்கில் ஜைட்டோமிர் நகரம் வரையிலும் ஏவுகணைகள் மழையாகப் பொழிந்தன.

கார்கிவிலும், ஒடேசாவிலும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பல பகுதிகளில் மின்கட்டமைப்புகள் பெருத்த சேதத்துக்கு ஆளானதால் அவை இருளில் மூழ்கின.

தலைநகர் கீவிலும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சமீப காலத்தில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் இதுதான் என்று உக்ரைன் தெரிவித்தது.

அதே நேரத்தில் ரஷ்யாவின் 34 ஏவுகணைகளையும், ஈரான் தயாரிப்பான ஷாகித் டிரோன்கள் 4-ஐயும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்தது.

மேற்கு உக்ரைனில் லிவிவ் நகரில் ஒரு வீட்டின் மீது ஏவுகணை விழுந்து தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தகவலை அந்த பிராந்தியத்தின் கவர்னர் மாக்சிம் கோஜிட்ஸ்கி சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார். டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் ஏவுகணை, டிரோன்தாக்குதலில் ஒருவர் பலியானார்.

5 பேர் படுகாயம் அடைந்தனர். கீவ் நகரில் தொடர்ந்து வான்தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் விடிய விடிய ஒலித்ததாக தெரிய வந்துள்ளது.

அங்கு ஏவுகணை மற்றும் வெடிக்கும் டிரோன்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் பல வழிமறித்துத் தாக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு மின்சக்தி கட்டமைப்புகள் பாதிப்புக்குள்ளானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...