கடைசி ஓவரில் 5 சிக்சர்!!

Date:

கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் என்ற தேவை இருந்தபோது, அந்த அணியின் ரின்கு சிங் கடைசி 5 பந்தில் 5 சிக்சர்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்துள்ளார். கொல்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ரஷித் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் ரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன்களாக களத்தில் இறங்கினர். ரிதிமன் சாஹா 17 ரன்னும் கில் 39 ரன்னும் எடுத்து வெளியேற அடுத்து வந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருடன் அபினவ் மனோகர் பார்ட்னர்ஷிப் அமைக்க குஜராத் அணியின் ரன் குவிப்பு வேகம் எடுத்தார்.

அபினவ் மனோகர் 14 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த விஜய் சங்கர் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் விஜய் சங்கர் 63 ரன்கள் குவிக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை எடுத்தது. இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

தொடக்க வீரர் குர்பாஸ் 15 ரன்னும், ஜெகதீசன் 6 ரன்னும் எடுத்து மோசமான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும் அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 40 பந்தில் 83 ரன்னும், நிதேஷ் ராணா 29 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர். கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை யஷ் தயாள் வீசினார். முதல் பந்தில் உமேஷ் யாதவ் சிங்கிள் தட்ட, அடுத்து பேட்டிங் செய்த ரின்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இந்த ஆட்டம் இருந்ததாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...