கனடாவில் இந்து கோயில் சேதம்

Date:

இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர்.

குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலிஸ்தான் செயல்பாடுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக இந்தியா தனது கவலையை கனடாவிடம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்து கோயில்கள் கனடாவில் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் இந்து கோயில்கள் தாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றிரவு பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதோடு கோவில் கதவில் ஜூன் 18 ஆம் திகதி நடைபெற்ற கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரணை செய்கிறது என சுவரொட்டி ஓட்டிவைத்து சென்றுள்ளனர்.

மேலும், காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்த சுவரொட்டியையும் ஒட்டி வைத்துள்ளனர்.

கனடாவின் சர்ரே பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் டைகர் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

குருநானக் சீக்கியர் குருத்வாரா சாஹிப்பின் தலைவரான அவர், குருத்வாரா வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதார்.

இதனைத்தொடர்ந்து இந்த செயலில் அவரது ஆதரவாளர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...